ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து காலியான ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12 நடக்கவுள்ள இடைத்தேர்தல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து சசிகலா தரப்புடன் மோதிய தீபா அரசியலில் இறங்க போவதாக அறிவித்தார்.
சசிகலா மீது கடுப்பிலிருந்த அதிமுக தொண்டர்களில் ஒரு பகுதியினர் தீபாவுக்கு பின்னால் திரண்டனர்.
ஜெயலலிதாவின் இரத்த உறவு, அவரைப்போன்ற தோற்றம் என்பவற்றால் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மத்தியில் தீபாவுக்கு நல்ல வரவேட்ப்பு இருந்தது.
அண்மையில் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து தீபாவுக்கு பெரும் வரவேற்பு இருந்தது உண்மையாயினும் பன்னீர் செல்வத்தின் கிளர்ச்சியின் பின்னர் நிலைமை அவ்வாறு இல்லை. சசிகலாவை எதிர்க்கும் அதிமுக வினரில் பெரும்பான்மையோர் தற்போது பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். சசிகலாவுக்கு சரியான போட்டியை பன்னீர்செல்வத்தால்தான் வழங்க முடியும் என்ற கருத்தே பரவலாக உள்ளது.
தீபா பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டால் அது சசிகலாவுக்கு கடும் சவாலாக அமையும் என்று பலரும் கருதினர். அதேபோல தீபாவும் பன்னீருடன் சென்று கை கோர்த்தார். ஆனால் திடீர் என்று 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை உருவாக்கி ஆர்.கே.நகரில் தனித்து போட்டியிடுவதாக தீபா அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் அணியினர் தனியாகவும் தீபா பேரவை தனியாகவும் போட்டியிடுவது அவர்களது பொது எதிரியான சசிகலாவுக்கே சாதகமாக அமையப்போகிறது.
ஜெயலலிதாவின் அனுதாப வாக்குகள் பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் தீபாவுக்கு பிரிந்து செல்ல போகிறது. இதனால் சசிகலா தரப்பு நோகாமல் நொங்கெடுக்க போகிறது என்கிறார்கள் அவதானிகள்.
0 comments:
Post a Comment