மகளிர் தினமான மார்ச் 8 ம் தேதி ஐ.நா.சபையில் நடக்கும் விழாவில் நடிகர் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் நடனமாட உள்ளார். அதற்காக கடந்த ஒரு மாத காலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஐஸ்வர்யா தனுஷை விட மிக திறமையான எத்தனையோ நடன கலைஞர்கள் தமிழகத்தில் இருக்கும் போது எப்படி ஐஸ்வர்யாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
தந்தையும் கணவரும் நடிகராக இருப்பது ஒரு தகுதியா? இல்லை ஐஸ்வர்யா சினிமா துறையில் இருப்பதுதான் தகுதியா என்று பலரும் கேட்க தொடங்கியுள்ளனர். எத்தனையோ ஆயிரக்கணக்கான மிக திறமையானவர்கள், நடனத்துக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்த கலைஞர்கள், நடன நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேடையேற்றி வருபவர்கள், நடனத்தையே தமது கலையாகவும் தொழிலாகவும் கொண்டவர்கள் என பலர் இருக்கும் போது சினிமா செல்வாக்கை வைத்து குறுக்கு வழியில் ஐஸ்வர்யா இந்த வாய்ப்பை பெற்றிருப்பது தவறானது என்பதே பலரதும் கருத்தாக உள்ளது.
0 comments:
Post a Comment