வட கொரியா தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய முப்படைகளின் தலைவரான தளபதி லீ சூன்-ஜின் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஏவுகணைகளை கடலுக்குள் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகம் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தென் கொரிய முப்படைகளின் தலைவரான தளபதி லீ சூன்-ஜின் வெளியிட்ட அறிக்கையில்
'வட கொரியாவின் வடக்கு பியோங்கன் மாகாணத்தில் உள்ள டோங்சாங்ரி பகுதியிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. இவை தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகளாகும். அந்த ஏவுகணைகள் சுமார் ஆயிரம் கி.மீ. தூரத்திலுள்ள கிழக்கு கடலில் வீழ்ந்தன' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரிய ராணுவம் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து பயிற்சிகளை வருடா வருடம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கை தமது நாட்டை சீண்டுவதாகவும் படையெடுப்பு அச்சுறுத்தல் நடவடிக்கை என்றும் வட கொரியா தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருகிறது.
தற்போது இந்த போர்ப் பயிற்சி தொடங்கிய நிலையில் வட கொரியாவின் ஏவுகணை சோதனை நடைபெற்றிருக்கிறது.
ஏலவே வட கொரியா பல ஏவுகணை சோதனைகளை செய்திருந்ததுடன்
அணு ஆயுதம் தாங்கி நீண்ட தூரம் பறந்து இலக்கைத் தாக்கும் வல்லமையுள்ள ஏவுகணைகள் தம்மிடம் இருப்பதாக வட கொரியா கூறியுள்ளது.
மேலும் வட கொரியா கடந்த ஆண்டு இரு அணுகுண்டு பரிசோதனைகளை நடத்தியதால் ஐ.நா. பாதுகாப்பு சபை பொருளாதார தடையை வட கொரியா மீது விதித்துள்ளது.
0 comments:
Post a Comment