இலங்கை

லீனா ஹென்றிக்கு லண்டனில் ஆதரவு




மனித உரிமை ஆர்வலரான லீனா ஹென்றி இலங்கையின் போர் குறித்த ”No fire zone” ஆவணப்படத்தை சேலாங்கூரில் உள்ள சீன மண்டபம் ஒன்றில் 2013 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி திரையிட்டிருந்தார்

அனுமதியின்றி இந்த ஆவணப்படத்தை திரையிட்டதாக லீனா ஹென்றி மீது திரைப்பட தணிக்கைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், வழக்கினுடைய குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மைகள் உரிய முறையில் நீரூப்பிக்க தவறியுள்ளதாக தெரிவித்து குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக 2016 இல் நீதிபதி மொஹட் ரிஹெப் மொஹட் அரீஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக மீண்டும் லீனா ஹென்றி வழக்குக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, லீனா ஹென்றி குற்றவாளி என்றே நீதிமன்றம் கருதுகிறது.

ஆனால் லீனா ஹென்றிக்கு எந்த தண்டனையும் அறிவிக்கப்படவில்லை. அவருக்கு 3 வருட சிறை வாசம் அல்லது 30,000 றிங்கிற் தண்டப்பணம் விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இவரது தண்டனை தொடர்பில் அடுத்த இம்மாதம் 22 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மலேசிய மனித உரிமை ஆர்வலர் லீனா ஹென்றியை தண்டனையிலிருந்து பாதுகாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு அங்கமாக நாளை வியாழன் லண்டன் மலேசிய உயர்ஸ்தானிகத்திற்கு முன்பாக அறவழிப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.


0 comments:

Post a Comment

Powered by Blogger.