தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்டு பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்கள்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடக்கும் போராட்டத்தில், பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். அதிமுக பேச்சாளர்களாக இருக்கும் நடிகர் மனோபாலா, லியாகத் அலிகான், ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கோவை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல் போன்ற பல இடங்களில் இடம்பெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் பவித்ரன், நடிகை பாத்திமா பாபு, நடிகர் தியாகு, நடிகர் ஜெயகோவிந்தன், இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், நடிகர் ராமராஜன், நடிகை ரஜினி போன்றோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.
இவர்களை பன்னீர்செல்வம் அணியினரின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் தடுக்க தினகரன் கடும் முயற்சி செய்தபோதும் அது பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment