பொதுமக்கள் பாவிக்கும் கைபேசிகள், கணினிகள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மூலம் சிஐஏ (அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை ) ஊடுறுவி உளவு பார்ப்பதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
விக்கிலீக்ஸ் சிஐஏ இணைய புலனாய்வு மையத்தின் ஏழாயிரம் ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
தம்மிடம் உள்ள ஆவணங்களில் ஒரு சதவீதமே இது என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தொடர்ந்தும் உலகம் முழுவதும் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சில காலத்திற்கு முன்பு உலக தலைவர்களின் தொலைபேசிகளை அமெரிக்க ஒட்டு கேட்டமையை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது. இது தொடர்பில் ஜெர்மனி உட்பட பல நாடுகளும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
தற்போது பொதுமக்களின் மின்னணு சாதனைகள் மூலம் உளவறியும் அமெரிக்காவின் நடவடிக்கை விக்கிலீக்ஸ்சால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நட்பு நாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.
வாட்ஸப் போன்றவை போன்றவை பாதுகாப்பானவை என்று விளம்பரம் செய்ஸ்யப்பட்டாலும் உண்மை அதுவல்ல என்றே இந்த நிகழ்வு காட்டுகிறது.
0 comments:
Post a Comment