அமெரிக்காவா மற்றும் அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகளாலும் தூண்டிவிடப்பட்டு வட ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த அரபு வசந்த கிளர்ச்சியானது அந்த பிரதேத்தில் பெரும் அழிவை உண்டாக்கியது. லிபியா முதல் எகிப்து வரை பெரும் கலவரங்கள் ஏற்பட்டன.
செல்வா செழிப்போடு இருந்த அந்த நாடுகள் இன்று சீரழிந்து வறுமையிலும் உள்நாட்டு போரிலும் சிக்கி தவிக்கின்றன. சிரியாவிலும் இதே நிலையே ஏற்பட்டது.
அதன் பின்னர் ஐ.எஸ். எனும் பயங்கரவாதிகள் தமது பங்குக்கு உலகம் காணாத கொடுமைகளை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த கொடுமைகளில் இருந்து உயிர் காக்க இலட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பா நோக்கி அகதிகளாக இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு இடம்பெயர்ந்த சிரிய அகதி குடும்பமொன்று லெபனான் நாட்டிலுள்ள பெல்ஜிய நாட்டுத் தூதரகத்தில் பெல்ஜியத்திற்குச் சென்று அடைக்கலம் கோருவதற்காக மனிதாபிமான விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.
ஆனால் பெல்ஜிய அதிகாரிகள் பெல்ஜியத்தில் 90 நாட்களுக்கு மேல் இந்த குடும்பம் தங்கி விடுவார்கள் என்ற காரணத்தை காட்டி விசாவை வழங்க மறுத்துவிட்டார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் 7ம் திகதி இவ்வாறு விசா வழங்கப்பட வேண்டிய தேவை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
0 comments:
Post a Comment