மத்திய அரசு உண்மையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனை போராட்டக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்டால் மட்டும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நீதி கேட்டு மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து கருத்து கேட்ட போதே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மீனவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. மத்திய அரசின் உண்மையான முயற்சிகளை போராட்டக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறும் போது உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்துவதோடு கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கச்சத்தீவை மீட்க முடியாது, கச்சத்தீவை மீட்பதன் மூலம் மட்டும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்று கூறினார்.
0 comments:
Post a Comment