அரசியல்

இலங்கை விமான நிலையத்தில் தந்தை மகள் கைது



இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த  தந்தையும் மகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நாடு திரும்பிய இவர்கள் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து 25 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த தியாகராஜாவும் (52 ) அவரது மகளான ஜனனியும் (24) நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்ததுள்ளார். ஆனால் கைதுக்கான காரணம் தனக்கு தெரியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்

விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்

இலங்கையில் தற்போது கைது மற்றும் சித்திரவதைகள் நடைபெறுவதில்லை என்று உலக அரசாங்கங்கள் கருத்து வெளியிடுகின்றன அதே சமயம் இலங்கையில் இவ்வாறு கைதுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது


0 comments:

Post a Comment

Powered by Blogger.