உலகம்

அமெரிக்க, ரஷ்ய, துருக்கி தளபதிகள் சந்திப்பு



அமெரிக்கா ரஷ்யா மற்றும் துருக்கி இராணுவ தளபதிகள் இன்று செவ்வாயன்று சிரியா மற்றும் ஈராக்கில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து சந்தித்து உரையாடியுள்ளனர்.
துருக்கி நாட்டிலுள்ள அண்டாலியா நகரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

இதே வேளை வடக்கு சிரியாவிலுள்ள மன்பிஜ் நகரத்தில் அமெரிக்க ஆதரவு குர்திஸ் படையினருக்கும் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த விடயத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக சிறிய அளவிலான அமெரிக்க படையினர் கடந்த திங்களன்று அங்கு சென்றுள்ளதாக பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அமெரிக்க படையினர் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட 20 கிராமங்களை சிறிய அரச மற்றும் அமெரிக்க ஆதரவு சிரிய படைகளுக்கு வழங்கும் நிகழ்வில் முதன்முதலாக கலந்து கொண்டனர். இந்த இணக்கப்பாடானது மன்பிஜ் நகரத்தில் இடம்பெற்றது.

அமெரிக்க ஆதரவு சிரிய படையினரில் பெரும்பான்மையாக குர்திஸ் இனத்தவரே உள்ளனர். இவர்களை துருக்கி அரசாங்கம் பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது
இந்த சிக்கல்களுக்கு இடையே ரஸ்யாவின் ஆதரவு கொண்ட சிரிய அரச படையினரும் இந்த பகுதியில் முன்னேறி வருகிறார்கள்.


ரஷ்ய ஆதரவு கொண்ட சிரிய அரச படையினர், அமெரிக்க ஆதரவு போராளிகள், துருக்கி ஆதரவு போராளிகள் என்று பல்வேறு தரப்பினரும் தத்தமது நலனை மையமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கிடையே அடிக்கடி முரண்பாடுகள் தோன்றுகின்றன.ஆனால் இவர்களை .எஸ். க்கு எதிரான போர் என்ற ஒரு சிறு நூலே தற்போதைக்கு இணைத்து வைத்துள்ளது. இந்த சிறு நூல் எந்தக்கணத்திலும் அறுந்து விடக்கூடியதாகவே உள்ளது

0 comments:

Post a Comment

Powered by Blogger.