காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பாக நடிகை மீனாவிற்கு இந்திரா காந்தியின் பெயரில் விருது வழங்க இருப்பதை கடுமையாக எதிர்ப்பதாக நடிகை நாகமா தெரிவித்துள்ளார்.
மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பாக 11ம் தேதி விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலாளர் நக்மா கலந்துகொள்வதற்காக இருந்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாளர்களான நடிகைகள் கே.ஆர்.விஜயா, ஜெயசித்ரா, மீனா போன்றவர்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவை முன்னாள் எம்.எல்.ஏ.யசோதா ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் ''மீனாவிற்கு இந்த விருது பெறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார்?
எனவே நடிகை மீனாவுக்கு இந்திரா காந்தியின் பெயரில் விருது வழங்க கூடாது. அப்படி வழங்குவதாக இருந்தால் நான் விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்'' என்று காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலாளர் நாக்மா தெரிவித்துள்ளார்.
நடிகை நக்மா கிறிஸ்தவ பிரசாரங்களில் தீவீரமாக ஈடுபட்டு வந்தார். இயேசுவை நேரில் கண்டதாகவும், இயேசுவுடன் நேரில் பேசியதாகவும் மேடைகளில் அவர் பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment