நீங்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு தெரியாமல்தான் அரசாங்கம் கவிழ்க்கப்படுகின்றது. ஆகவே நீங்கள் எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் அரசாங்கம் மாறும். ஜனாதிபதி தேர்தல் மூலம் பிரதமர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலை நடத்தி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டமை முன் எப்போதும் இல்லாத புதியவிடயம். அதுபோல நினைக்காத ஒன்று நடைபெறும். அதனை நாம் நடத்திக்காட்டுவோம்.
யுத்ததின் போது அங்கவீனமான படைவீரர்கள் ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நேரில் சென்றார்.
இதன்போதே ஊடகவியலார்களிடம் பேசிய பந்துல குணவர்தன விரைவில் மகிந்த ராஜபக்ஷ நீங்கள் எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் ஆட்சிக்கு வருவார் என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment