பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் இருந்த மிருக காட்சிசாலைக்குள் புகுந்த கொள்ளையர் சிலர் அங்கிருந்த காண்டாமிருகம் ஒன்றை சுட்டுக்கொன்று அதன் கொம்பினை வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
தலையில் மூன்று முறை சுடப்பட்ட நான்கு வயதுடைய வின்ஸ் என்ற அந்த வெள்ளை காண்டா மிருகத்தை இறந்த நிலையில் ஊழியர்கள் கண்டெடுத்துள்ளனர். அதன் இரண்டாவது கொம்பையும் எடுப்பதற்காக கொள்ளையர்கள் முயற்சித்துள்ளபோதும் நேரமின்மையால் அதனை முழுதாக அவர்களால் எடுத்து செல்ல முடிந்திருக்கவில்லை. கொல்லப்பட்ட காண்டா மிருகத்துடன் இருந்த மேலும் இரண்டு வெள்ளை காண்டா மிருகங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர்தப்பியுள்ளன. கொள்ளையர்கள் இவற்றையும் கொன்று கொம்பை எடுக்கும் திட்டத்துடன் வந்திருப்பார்கள் ஆனால் நேரம் இன்மையால் அது அவர்களுக்கு சாத்தியமாகி இருக்காது என்று கருதப்படுகிறது.
கொல்லப்பட்ட வின்ஸ் 2012 இல் நெதர்லாந்தில் பிறந்து 2015 இல் பாரிஸ் கொண்டுவரப்பட்டது.
காண்டா மிருகத்தின் கொம்பில் பாலியல் மருத்துவ குணமிருப்பதாக சீனர்கள் நம்புகிறார்கள். எனவே காண்டா மிருகங்கள் கொல்லப்பட்டு அவற்றின் கொம்புகள் சீனாவுக்கு கடத்தப்படுகின்றன.
ஒரு கொம்பானது சுமார் 36 000 டொலர்களுக்கு மேல் கள்ள சந்தையில் விற்கப்படுகிறது.
0 comments:
Post a Comment