இந்தியா

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்போம் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு



இம்மாதம் 11ம் திகதி இந்தியா மற்றும் இலங்கை நாட்டை சேர்ந்தவர்களால் சேர்ந்து கொண்டாடப்படும் புனித அந்தோணியார் கோவில் திருவிழா ஆரம்பிக்கவுள்ளது. இரண்டு நாட்கள் நடக்கவுள்ள இந்த திருவிழா குறித்த அறிவிப்பு நெடுந்தீவு பங்குதந்தை மூலம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடித்து வரும் இலங்கையைக் கண்டிக்கும் வகையில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை புறக்கணிப்போம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் இந்த கச்சத் தீவு அமைந்துள்ளது. வருடா வருடம் இரு நாட்டு மீனவர்களும் இணைந்தே புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்று வருகிறார்கள்.

இலங்கை கடற்படையினர் தமிழக கடலோர பகுதிகளில் மீன் பிடித்த தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
இவ்வாறு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது,ம் சிறையில் அடைப்பதும், தாக்குவதும், படகுகள் வலைகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.

120க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்களையும் அவர்களது 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 50 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்

எனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கும் வரை கச்சத் தீவு திருவிழாவிற்கு செல்ல மாட்டோம் என்று அனைத்து மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழக முதல்வர் பழனிசாமி, நடக்கவுள்ள கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டி தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்து தரப்பட வேண்டும் என்றும் கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்றும் முதல்வர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது


0 comments:

Post a Comment

Powered by Blogger.