முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களுடன் அரசியலில் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தது. கொள்கையில் நமக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஆனால், முதலமைச்சராக இருந்து மறைந்திருக்கிறாரே, அது உண்மையான மரணமா? இல்லை மர்மமான மரணமா? அந்த மரணத்துக்கு பின்னால் என்னென்ன இருக்கிறது? என்ற கேள்விகள் உள்ளன. இன்று பொதுமக்கள் நம்மை விட தெளிவாக இருக்கிறார்கள்.
விசாரணை வைத்துதான் தீர்ப்பு தர வேண்டும் என்றில்லை. மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணியின் மகளிர் தின விழாவில் பேசும்போதே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் ஸ்டாலின் மேலும் பேசும்போது, ஜெயலலிதாவை கொன்றது சசிகலாதான், சசிகலா குடும்பம்தான் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறதா? அல்லது அதற்கு முன்பு சட்டமன்ற தேர்தல் வரப்போகிறதா? அல்லது இதே ஆட்சி நீடிக்கப்போகிறதா? என்ற கேள்விகள் பரவலாக உள்ளன. இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் ஒன்றைப்பற்றிதான் பேசுகிறார்கள். மக்கள் என்னிடம் ஏன் இன்னும் முடிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்களில் சட்டம் படித்தவர்களும் உண்டு. ஆனால், கட்சித் தாவல் தடை சட்டம் ஒன்று இருக்கிறது என்பதை மறந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. சசிகலா தலைமையில் இருக்கக்கூடிய இந்த பினாமி ஆட்சி ஒழிய வேண்டும். இதுதான் மக்களது விருப்பமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment