கொசிப்

வாயை கொடுத்து வாங்கி கட்டிய ராதாரவி



மாற்று திறனாளிகளை கேவலமாக பேசிய ராதாரவியை கண்டித்து மாற்றுத் திறனானிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள ராதாரவி வீட்டு முன் மாற்றுத் திறனானிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் ஊர்வலமாகச் சென்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த மாற்றுத் திறனானிகள் ராதாரவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி வேண்டினர். இதையடுத்து ராதாரவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் ராதாரவி சமீபத்தில் தி.மு.கவில் இணைந்தார். தி.மு. செயல் தலைவர் மு..ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பேசிய ராதாரவி மாற்றுத் திறனாளிகள் குறித்து குறைவாக பேசியுள்ளார். தற்போது இந்த பேச்சுக்கு எதிராக பல தரப்பிலும் இருந்து ராதாரவிக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.இதையடுத்து தனது பேச்சுக்கு ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ராதாரவி இதுகுறித்து தனது அறிக்கையில், மாற்றுத் திறனாளிகளை நான் பெரிதும் மதிப்பவன். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு வகுப்பறை கட்டிக் கொடுத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் அவர்ளை இழிவுபடுத்தி பேசுவேனா. ஒரு கருத்தை வலியுறுத்தவே அப்படி பேசினேன். மாற்றுத் திறனாகளை அவமானப்படுத்த வேண்டும், கிண்டல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை.

எனது பேச்சு யார் மனதையாவது வேதனைப்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.