ஈராக் படைகள் அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலை மீட்க போராடி வருகின்றன.
2014 ஜூன் மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மொசூல் நகரை கைப்பற்றி பெரும் கொடூரங்களை நடத்திருந்தனர்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமானது ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி முன்னேறி வந்தது. இந்த நிலையில் ரஷ்யா சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது விமான தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் வரவு கள நிலவரத்தை மாற்றியது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளளும் ஐ.எஸ். மீது தாக்குதலை நடத்தினர்.
வெளிநாடுகளின் ஆதரவு கிடைத்த சிரிய மற்றும் ஈராக் படைகள் தீரமுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டனர். இதனால் இஸ்லாமிய குடியரசு என்று ஐ.எஸ். கனவு கண்ட நிலங்கள் பறிபோய் தற்போது சில குறிப்பிட்ட இடங்களே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள கடைசி நகரமாக மொசூல் உள்ளது. இந்த நகரத்தின் 30 வீதமான பகுதிகளை அரச படைகள் மீட்டுள்ளன.
மிகுதி இடங்களை கைப்பற்ற பெரும் போர் இடம்பெற்று வருகிறது.
தற்போது ஈராக் மொசூல் நகரத்தின் டைகிறீஸ் நதியை கடக்கும் பாலத்தை கைப்பற்ற போர் நடக்கிறது. இந்த பாலம் கைப்பற்றப்படுமானால் அரச படைகள் மொசூல் நகரின் ஐ.எஸ். கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்துவிடும்.
இந்த நிலையில் மொசூல் நகருக்கான ஐ.எஸ். கமாண்டர் கொல்லப்பட்டுள்ளமை அரச படைகளின் முன்னேற்றத்தை வேகப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment