இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பத்தாயிரம் கோடி ஊழல் விசாரணை முடிவுக்கு வரவுள்ளது. இந்த ஊழல் குறித்த விசாரணை கடந்த ஒரு வருடமாக இடம்பெற்றது. இலங்கை நிதி மோசடி விசாரணை பிரிவு இந்த விசாரணையை நடத்தியிருந்தது.
மகிந்த ராஜபக்ஸ அவரது சகோதரர்களான கோட்டபாய ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, மனைவி ஷிரந்தி ராஜபக்ஸ, மகன்கள் நாமல் ராஜபக்ஸ, யோஷித ராஜபக்ஸ, மகிந்தவின் சகாக்களான விமல் வீவன்ச, கெஹெலிய ரம்புக்வெல, ஏக்க நாயக்க போன்ற இன்னும் பலர் இந்த விசாரணையில் சிக்கி இருந்தனர்.
ஆனால் விசாரணைகள் மந்த கதியில் இடப்பெறுவதாகவும், குற்றவாளிகளை தப்பிவிட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.
உயர் மட்ட தலையீடுகள் காரணமாக நிதி மோசடி விசாரணை பிரிவு செயல் இழந்துள்ளதாக ஜே.வி.பி.கட்சியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸாநாயக்க குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் அரசாங்கத்தில் உள்ள சிலர் சில விசாரணை கோவைகளை மூடிவிடும்படி அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் விசாரணைகள் முடிவடைந்து 60 அறிக்கை ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
0 comments:
Post a Comment