இந்தியா

கூலிப்படை வைத்து என்னை மிரட்டுகிறார்கள் - தீபா




ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து பிரபலமான தீபா தனது அத்தையின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறார். அத்துடன் ஜெயலலிதா தலைமை தாங்கிய அதிமுக கட்சியும் அவரது சொத்துக்களும் சசிகலாவால் அபகரிக்கப்பட்டு விட்டது அவற்றை மீட்பேன் என்றும் கூறி வருகிறார்.

எதிர்வரும் 12 ம் திகதி ஜெயலலிதாவின் மரணத்தால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் முன்பு அறிவித்தபடி தீபா போட்டியிடுகிறார்.

நேற்று திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை வைத்து தியானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது தன்னை அழிக்க சாதி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். தேர்தலில் போட்டியிடாமல் விலகும்படி கூலிப்படை வைத்து சசிகலா தன்னை தரப்பு மிரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ள தீபா இதற்கு சரியான பதிலை மக்கள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.