அரசியல்

உக்ரேய்ன் பொய் சொல்கிறது - ரஷ்யா




ரஷ்யா பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதாக உக்ரேய்ன் குற்றம் சாட்டுவதில் உண்மை இல்லை. கிரிமியாவில் தத்தார்களும் உக்ரேனியர்களும் பாரபட்சத்துக்கு உட்படுத்தப்படுவதாக உக்ரேய்னால் கூறப்படும் குற்றச்சாட்டு அரசியல் லாபத்துக்கானது என்று ரஷ்யா கூறியுள்ளது. மேலும் உக்ரேய்ன் பொய் தகவல்கள் மூலம் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தை பிழையாக வழி நடத்துகிறது குற்றம்சாட்டியுள்ளது.
நீதிக்கான சர்வதேச நீதிமன்றில் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்கும் போதே ரஷ்ய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த உக்ரேய்ன் 1990 இல் சோவியத் யூனியலிருந்து பிரிந்தது. ரஷ்யாவின் எல்லை நாடாக இருக்கும் உக்ரேய்ன் ரஷ்யாவின் பரம எதிரியான அமெரிக்கா வழிநடத்தும் நேட்டோ இராணுவ அமைப்பில் இணைந்தது. அமெரிக்காவின் படைகளை ரஷ்யாவின் எல்லை அருகிலேயே நிலை நிறுத்தி ரஷ்யாவை அச்சுறுத்த உக்ரேய்ன் உதவி புரிந்தது. இது ரஷ்யாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

அதேவேளை உக்ரேய்ன் ரஷ்யாவின் எரிபொருளில் தங்கி இருந்தது. ரஷ்யாவுக்கு கொடுக்கவேண்டிய கடன் பில்லியன்களில் இருந்தது.
இந்த நிலையில் அருகில் இருந்த போலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இணைந்ததால் வளர்ச்சியடைந்துள்ளது எனவே நமது உக்ரேய்ன் நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய வேண்டும் என்று அமெரிக்க சார்பு அரசியல்வாதிகள் உக்ரேய்ன் மக்கள் மத்தியில் கருத்துக்களை பரப்பினார்கள்.

அவ்வாறு ஐரோப்பிய யூனியனில் உக்ரேய்ன் இணைய விரும்பினாலும் அதற்கும் சிக்கல்கள் இருந்தன. 2014 இல் வெளிநாட்டு கடன்கள் மற்றும் வட்டிகளுக்காக 17 பில்லியன் டாலர் நிதி உதவி உக்ரேனுக்கு தேவைப்பட்டது. அத்தோடு உக்ரேய்ன் ஐரோப்பிய யூனியனில் இணைவதாக இருந்தால் தாராள சந்தை முறைக்கு மாறவேண்டும், வெளிநாட்டு பொருட்களுக்கு சந்தையை திறந்து விட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இதனால் உக்ரேய்ன் நாட்டின் உள்நாட்டு உற்பத்திகள் அழிந்துவிடுமென அஞ்சப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யா 15 பில்லியன் டாலர் முதலீடு செய்து உக்ரேனுக்கு உதவுவதாகவும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. இதனை உக்ரேயின் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

ஆனால் அமெரிக்கா இதனை விரும்பவில்லை. எனவே வழமையாக அமெரிக்கா தனது சொல்லை கேட்காத ஒரு நாட்டில் என்ன செய்யுமோ அதை உக்ரேனிலும் செய்தது. தனது அடியாட்களை அனுப்பி உக்ரேய்ன் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டது. மக்கள் கிளர்ந்து எழுந்ததாக அமெரிக்க சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அமெரிக்க ஊடகங்களை கொப்பி பேஸ்ட் செய்யும் எமது செய்து ஊடகங்களும் அவ்வாறே செய்தி வெளியிட்டன.

போராட்டத்தையடுத்து உக்ரேய்ன் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். இதே சமயத்தில் ரஷ்ய மக்கள் அதிகமாக வசிக்கும் உக்ரேய்ன் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியா சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி ரஷ்யாவுடன் இணைவதாக அறிவித்தது. ரஷ்யா கிரியாவுக்கு தனது படைகளை அனுப்பி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ரஸ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. ஆனால் ரஷ்ய அதிபர் புட்டின் செல்வாக்கு உள்நாட்டிலும் உலக அரங்கிலும் அமோகமாக அதிகரித்தது. ரஷ்யா மீண்டு எழுந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் அலறின.

இதுவரை உக்ரேய்ன் ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கிய கடனை அடைக்கவில்லை. அமெரிக்காவும் மேற்குலகும் அந்த கடனை அடைக்க உதவி புரிவார்கள் என உக்ரேய்ன் நம்பியது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

இந்த நிலையில் ரஷ்யாவின் எல்லை நாடாக இருக்கின்ற உக்ரேனை ரஷ்யாவுக்கு எதிராக மாற்றி அமெரிக்கா பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. இந்த பிரச்னையை மையமாக கொண்டு நேட்டோ அமைப்பு ரஷ்யாவை சுற்றி படைகளை நகர்த்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் காணப்படுகிறது. மீண்டும் ஒரு உலக யுத்தம் வந்துவிடுமோ என அஞ்சப்பட்டது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா ஈராக் நாடுகளின் பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் அமைத்ததால் உலக கவனம் அந்த பக்கமாக திரும்பியது. ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தது.

இப்படி தற்காலிகமாக உக்ரேய்ன் நெருக்கடி போர் வரை செல்லாமல் தவிர்க்கப்பட்டாலும் வேறு வழிகளில் ரஷ்யாவை அடக்கி வைப்பதற்கு உக்ரேய்ன் நாடு பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒன்றாகவே நீதிக்கான சர்வதேச நீதிமன்றில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேய்ன் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு பார்க்கப்படுகிறது.







0 comments:

Post a Comment

Powered by Blogger.