நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரி பொருள் திட்டத்தை எதிர்த்து இன்று 22வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் பல பாகங்களிலும் இருந்தும் மாணவர்கள், விசாயிகள், பொதுமக்கள் என சகலரும் நெடுவாசல் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரி பொருள் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து நெடுவாசல், கோட்டைக்காடு, நல்லாண்டார் கொல்லை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, கருக்காகுறிச்சி, கோட்டைக்காடு, வாணக்கன்காடு ஆகிய இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்பாட்டிற்கு மக்களும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் அதை கண்டு கொள்ளாத மத்திய அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தது. இதனால் வெகுண்டெழுந்த விவசாயிகளும் பொது மக்களும் மாணவர்களும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் ஆயிரக்கணக்கானோரை கிராம மக்கள் அன்புடன் வரவேற்று உபசரித்து தினமும் உணவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment