இலங்கை

பெளத்த பிக்குகள் அரசாங்கத்தை கவிழ்க்க போராட்டம்



கடும்போக்கு பெளத்த பிக்குகள் இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர். தற்போது பொதுபல சேனா , ராவண பலய, சிங்கள ராவய போன்ற கடும்போக்கு பெளத்த பிக்குகளின் அமைப்புகள் ஒன்று கூடி மீண்டும் ராஜபக்ஸவை ஆட்சியில் ஏற்ற புதிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

''அமைதி காத்தது போதும். பௌத்த பிக்குகள் அனைவரும் இணைந்து வீதிக்கு இறங்கினால் மாத்திரமே நாட்டை காப்பாற்ற முடியும். விகாரகைளில் அமைதியாக கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டு நாட்டை பாதுகாக்க போராடுங்கள். 200 வருடங்களின் பின்னர் மீண்டும் நாம் அடிமைப்பட்டுள்ளோம். வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுகின்றனர். தமிழ் இனவாதிகள் இன்று தலைதூக்கியுள்ளனர். வடக்கு கிழக்கில் இருந்து புலனாய்வாளர்கள் வெளியேறியுள்ளனர். புலம்பெயர் தமிழ் இனவாதிகளை அரசியல் ரீதியாக எம்மால் தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது. எனவே புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்'' என்று கடும்போக்கு பிக்குகள் கோரியுள்ளனர்.

கொழும்பில் உள்ள அபயராம விஹாரையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா, ராவண பலய, சிங்கள ராவய, தாதியர் சங்கம் ஆகிய கடும்போக்கு அமைப்புக்கள் இணைந்து தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் இந்த ஆட்சியை கவிழ்க்க போவதாக அவர்கள் சூளுரைத்துள்ளனர்.

இலங்கையில் உள்ள கடும்போக்கு பெளத்த பிக்குகள் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இயங்கி வருகிறார்கள். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை இலங்கையில் இருந்து அகற்ற வேண்டும் என்று அவர்கள் நீண்ட காலமாக வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கை நாடு பெளத்த மதத்தை சேர்ந்தோருக்கும் சிங்கள மக்களுக்குமே சொந்தம் என்பது இவர்களின் வாதமாக உள்ளது. தமிழர்கள் இந்தியா செல்லவேண்டும், முஸ்லிம்கள் சவூதி செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்து இஸ்லாம் கிறிஸ்தவ மத தலங்கள் மீது பல தடவைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் அகிம்சை பெளத்த கோட்பாட்டை பின்பற்றும் பிக்குகளும் ஏராளமாக உள்ளனர். அவர்கள் சகல மத இன மக்கள் மீதும் பரிவு கொண்டவர்காளாகவும், உதவி செய்பவர்களாகவும் உள்ளனர்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வன்முறையை நாடும் பிக்குகளின் செயல்பாடுகள் காரணமாக, முழு பெளத்த பிக்குகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

உண்மையில் பெளத்த பிக்குகள் மிகவும் சாந்தமானவர்கள், நடக்கும் போது கூட எறும்புகள் மிதிபட்டு விட கூடாது என்பதற்காக விசிறிக்கொண்டே செல்வார்கள், மாமிசம் சாப்பிட மாட்டார்கள், ஆசையை துறந்தவர்கள் என்று தான் பொதுவாக உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இலங்கையில் உள்ள கடும்போக்கு பெளத்த பிக்குகள் தலைகீழான குணத்தைக்கொண்டவர்கள்.
மாமிசம் சாப்பிடுகிறார்கள். மது அருந்துகிறார்கள். திருட்டுத்தனமாக பெண்களுடன் உறவு வைத்திருக்கிறார்கள். குடும்பம் நடத்துகிறார்கள். சொத்து சேர்க்கிறார்கள். போதாதற்கு இனவாதம் பேசி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். கலவரங்களை ஏற்படுத்தி வன்முறையில் இறங்குவார்கள். ஆனால் இந்த குற்றவாளிகளை 'பிக்குகள்' என்ற உயர்ந்த வார்த்தையால் அழைக்க வேண்டியுள்ளது.
மேலும் இலங்கை அரசியல் அமைப்பிலும் சிங்கள மக்களின் கலாசாரத்திலும் பெளத்த பிக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

உண்மையான பெளத்த பிக்குகள் காடுகளில், மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் தியானம் செய்வார்கள். பசி வந்தால் பிச்சை எடுத்து உண்பார்கள். உயிர்களை நேசிப்பார்கள். வன்முறையை நிராகரிப்பார்கள். ஆனால் இலங்கையில் பெளத்த மக்கள் இறைச்சி, மீன் உட்பட ஏராளமான சமையலுடன் பிக்குகளுக்கு பெரும் விருந்து வழங்குவார்கள். ஊரில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் என்ற ரீதியில் விகாரையில் உள்ள பிக்குகளுக்கு உணவு கொடுக்கும் பொறுப்பை பெருமையுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் இந்த உணவுடன் மதுவும் வழங்கப்படுகிறது.

இப்படி எந்த உழைப்பும், பொறுப்பும் இல்லாமல் இலட்சக்கணக்கான பிக்குகள் இலவசமாக சாப்பிட்டு, சொத்துக்களை சேர்த்து கொழுப்பேறி கிடக்கிறார்கள். எனவே பொழுதுபோக்காக வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்.



எறும்பைக்கூட மிதிக்காத உண்மையான பெளத்த பிக்குகளுக்கு இலங்கையில் உள்ள ரவுடி பிக்குகள் அவமான சின்னமாக இருக்கிறார்கள்.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கும், வன்முறைகளுக்கும், அழிவுகளுக்கும் காரணமானவர்களில் பிக்குகள் முதன்மையானவர்கள்.
இவர்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, பிற மதத்தவருக்கு எதிராக கொடுமைகளை செய்து வருகிறார்கள்.



மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இப்படியான ரவுடி பிக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மகிந்தவின் ஆதரவுடன் பொதுபல சேனா , ராவண பலய, சிங்கள ராவய என வன்முறையை ஆதரிக்கும் பல பிக்குகளின் அமைப்புகள் இயங்கின. பிக்குகளின் ரவுடித்தனம் வீரமாக போற்றப்பட்டது. எனவே இந்த பிக்குகள் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

மகிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோற்றத்தை இந்த பிக்குகளால் ஏற்க முடியவில்லை. மீண்டும் அவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

தற்போது புதிய ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ராஜபக்ஸவினரின் ஆட்சியை உருவாக்க புதிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.