நாங்கள் இராணுவத்திடம் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் உறவுகள் எங்கே? அவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கார்களா? என்று கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பித்த போராட்டம் 18 நாட்களாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் வாக்கு கேட்டு வந்த எமது அரசியல்வாதிகள் இப்போது எமது உறவுகள் காணாமல் போயுள்ளமை பற்றி பேச மறுக்கிறார்கள். அது குறித்து அவர்களுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காணாமல் போன தமது உறவுகள் அரசாங்கத்தால் இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன என்றும் அவர்கள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்களில் பலர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார்கள். இது குறித்து ஆராய அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment