அரசியல்

ஏழை மக்களது வீட்டுமனைப்பட்டாவை ஆட்டையை போட்ட அமைச்சர்





புதுச்சேரி சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவருடைய மகன் விக்னேஷ்
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு என வழங்கப்பட்ட வீட்டுமனைப்பட்டாவை அபகரித்து ஆட்டையை போட்டுள்ளனர்.
இது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வீடற்ற தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்படுகிறது. அந்த நிலத்தில் அவர்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு நான்கு லட்சம் ரூபாய் மானியமும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆதிங்கப்பட்டி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த நிலங்களையே அமைச்சர் கந்தசாமியும் அவரின் மகன் விக்னேஷும் ஆக்கிரமித்துவிட்டனர் என்று இப்போது புகார் எழுந்துள்ளது.

இவர்கள்  விஸ்வா கன்ஸ்ட்ரக்ஷன்  என்ற பெயரில் வீடுகளைக் கட்டிக்கொண்டிருகின்றனர்.  இதற்கு ஆதிதிராவிட நலத்துறை இயக்குநரும் தற்கு துணைபோயுள்ளார். போலீசாரும் அரசாங்கத்தின் அமைச்சர் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத நிலையில் 
பாதிக்கப்பட்டவர்கள்  கவர்னர் கிரண் பேடியிடம் புகார் அளித்துள்ளனர்.


இங்கு சுமார் 2 ஆயிரம் வீடுகளை  சட்டவிரோதமாக கட்டி பெரும் ஊழல் செய்வதற்கான வேலைகள் நடைபெறுவதாக  புதுச்சரி தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

Powered by Blogger.