இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் சித்திரவதைகள் நடந்தது உண்மைதான் என்று இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு ஒப்புக்கொண்டுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜாஸ்மீன் சூகா ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அந்த சம்பவங்கள் தொடர்வதாக 2015ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஆட்சிக்காலத்தில் சித்திரவதைகள் நடந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேவேளை தற்போதைய மைத்திரி ரணில் நல்லாட்சியில் அவ்வாறான கொடுமைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அப்படியான கொடுமைகள் இல்லை என்றாலும் கூட கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.
இலங்கைக்கு வருமாறு ஜாஸ்மீன் சூகாவை நான் பல தடவைகள் அழைத்துள்ளேன். இந்த ஆட்சியில் பழைய கொடுமைகளுக்கு இடமில்லை என்பதை அவருக்கு நான் தெளிவாக கூறியிருந்தேன்.
மீண்டும் அவருக்கு நான் இலங்கைக்கு வருமாறு அழைக்கிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment