ஓ.பி.எஸ். அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று இந்த அறிவித்தலை தனது வீட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஓ.பி.எஸ் வெளியிட்டார்.
ஏலவே அ.தி.மு.க. சசிகலா அணியின் ஆர்.கே.நகர் வேட்பாளராக டிடிவி.தினகரன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த அறிவிப்புக்கு பல பக்கங்களில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஊடக கருத்து கணிப்புகளும் தினகரனுக்கு எதிராகவே இருக்கினறன.
டிடிவி தினகரன் மீது வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடமை நேரில் சந்தித்து ஓ.பி.எஸ். கோரிக்கை வைத்திருந்தார்.
இதேவேளை டிடிவி.தினகரனை அதிமுக தொண்டர்களும் ஆர்.கே.நகர் மக்களும் ஏற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் அதிமுகவையோ, தினகரனையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
திமுகவுக்கே எங்கள் ஆதரவு. யார் போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. தினகரன் மீது வழக்குகள் இருப்பது பற்றி தேர்தல் ஆணையம் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழம்பி போயுள்ளனர்.
பா.ம.க., ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ ஆகிய கட்சிகள் போட்டியிடுவதில்லையென முடிவெடுத்துள்ளன.
தே.மு.தி.க.வின் சென்னை மாவட்டச் செயலாளரான மதிவாணன் அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment