இந்தியா

கருணாஸின் சாதி கட்சியில் குழப்பம்



நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை எனும் கட்சியை உருவாக்கி ஜெயலலிதாவின் தயவில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக  பதவியை பிடித்தார்.
இப்படி சாதியின் பெயரில் கட்சி நடத்துவது பற்றி பலரும் கண்டித்திருந்தனர்.
ஆனால் கருணாஸ் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை.

தற்போது கருணாஸின் சாதி கட்சிக்குள் குழப்பங்கள் தோன்றியுள்ளன.

ஏற்கனவே சசிகலா தரப்புக்கு கருணாஸ் ஆதரவளித்ததால் திருவாடானை தொகுதிப்பக்கமே செல்ல முடியாத நிலையில் கருணாஸ் இருக்கிறார். மக்கள் அவர் மீது பெரும் கடுப்பில் உள்ளனர்.
சசிகலா தரப்பால் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது அவர்களை ஆடல் பாடலுடன் கருணாஸ் மகிழ்ச்சிப்படுத்தி இருந்தார்.
இந்த செய்தி வெளியானதும் கருணாஸ் மீது வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

இதற்கு ''இரண்டு லட்சம் பேர் உள்ள திருவாடானை தொகுதியில் எனக்கு 75000 பேர்தான் வாக்களித்திருந்தனர். எனவே எனக்கு வாக்கு போடாதவர்களுக்கு என்னிடம் கேள்வி கேட்க உரிமை இல்லை'' என்று கருணாஸ் விமர்சித்திருந்தார்.

அண்மையில் திருவாடனை சாலையில் இருந்த ஒரு சமுதாய தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக்க கருணாஸ் சென்றபோது சிலர் அவருக்கு செருப்புகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான் கருணாஸின் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது கட்சியின் அனைத்து புதிய நிர்வாகிகளையும் கூண்டோடு கலைத்துள்ளார்.

அதிகாரபூர்வ அனுமதிக் கடிதம் இன்றி நிர்வாகிகள் செயல்பட்டவர்கள் என்று கூறியுள்ள கருணாஸ், மாவட்ட, ஒன்றிய, நகர புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.