ஓராண்டு நிலவுடன் காதல் புரிந்து காணாமல் போன சந்திராயன்-1 செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர் அறுபட்டு காணாமல் போயிருந்த சந்திராயனை நாசா கண்டுபிடித்துள்ளது.
நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 செயற்கைக்கோள் 2008 அக்டோபர் 22 சந்திரனுக்கு அனுப்பப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் சந்திராயன்-1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை அடைந்ததுடன் வெற்றிகரமாக செயல்பட்டு சந்திரன் குறித்த தகவல்களையும் படங்களையும் அனுப்பியது. ஆனால் திடீரென 2009 ஆகஸ்ட் 29 சந்திராயனுடனான தொடர்புகள் விடுபட்டு போயின.
இரண்டு வருடங்கள் செயல்படும் என நம்பப்பட்ட சந்திராயன்-1 இப்படி பாதியிலேயே காணாமல் போனதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலையடைந்தனர். அதனை கண்டுபிடிக்க முயற்சித்தும் எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் சந்திராயன்-1 காணாமல் போனதாக அறிவித்தனர்.
ஆனால் தற்போது சந்திராயன்1 அழிந்து போகவில்லை இன்னும் சந்திரனை சுற்றி வருகிறது என அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்துள்ளது.
சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கி.மீ. தொலைவில் சந்திராயன்-1 சுற்றிக்கொண்டிருக்கிறது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
சந்திரயான்-1 அழிந்துபோகவில்லை என்றாலும் கூட அதனால் எந்த பலனும் இல்லை. செயல்படாத விண்வெளிக்குப்பையாக அது சந்திரனை சுற்றி வருகிறது. காலப்போக்கில் அது சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் சந்திரனில் மோதி அழிந்துவிடும்.
0 comments:
Post a Comment