பிரதமர் மோடியை மக்கள் அமோகமாக ஆதரிப்பதை நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த வெற்றியின் மூலம்
பிரதமர் மோடி செய்லபடுத்திய ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் தேர்தல் வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள் மத்தியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் மக்கள் மோடியினதும் பாஜகவினதும் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. கருத்து கணிப்புகளையும் மீறி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்களின் மனநிலை மாறி இருக்கிறது. தமிழகத்திலும் மக்கள் நிச்சயமாக மாற்றத்தை தருவார்கள். தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறார்கள். பாஜகவுக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. தமிழகத்திலும் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்'' என தமிழிசை மேலும் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இனிப்பு வழங்கி கொண்டாடினார். தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழிசை மேலும் கூறும்போது ''தேர்தல் இடம்பெற்ற ஐந்து மாநிலங்களிலும் பாஜக.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஜனதா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்டிலும் ஆட்சியை பிடித்துள்ளது. மணிப்பூரை பொறுத்தவரை கட்சி பெரிய அளவில் இல்லாதிருந்தும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் ஏற்கனவே இருந்ததை விட, இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மோடியின் திட்ட்ங்களால் தமிழகத்திலும் நிச்சயம் பா.ஜ.க. வெல்லும்'' என்று குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment