உலகம்

தொழுகையில் ஈடுபட்டிருந்த 140 பேரை படுகொலை செய்த தலிபான்கள்



அப்கானிஸ்தானின் வடக்கு நகரான மசார்-ஐ-ஷெரீப் நகருக்கு அருகேயுள்ள இராணுவத்தளத்தை இலக்கு வைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அப்கான் இராணுவத்தினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்காக போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் தலிபான் மதவெறியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த 140 பேரை கொலை செய்துள்ளனர்.

கொலை செய்தவர்களும் அல்லாகு அக்பர் (அல்லாவே பெரியவன்) என்று கத்தியிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களுக்கும் அல்லாகு அக்பர் (அல்லாவே பெரியவன்) என்று கத்தியிருக்கிறார்கள். இரண்டு தரப்பும் ஒரே கடவுளை கூப்பிட்டுக்கொண்டே கொலையை நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன.

அப்கான் இராணுவ வீரர்களின் உடையை அணிந்து தலிபான்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் 10 தலிபான்கள் ஈடுபட்டதாக அப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தவ்லத் வாசிரி குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 7 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் பிடிபட்டுள்ளதாகவும் மற்ற இருவரும் தப்பிவிட்டதாகவும் கூறப்பட்டுகிறது.



0 comments:

Post a Comment

Powered by Blogger.