இந்தியா

தமிழகத்தின் மானத்தை மிதக்க விட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ



தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகள் வறண்டு வருகின்றன. மாறி மாறி பதவிக்கு வந்த தமிழக அரசாங்கங்கள் தூரநோக்கில்  சிந்தித்து செயல்பாடாத காரணத்தால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

ஆட்சியில் உள்ள அதிமுக அரசியல்வாதிகள் அணிகளாக பிரிந்து சண்டையிட்டு வருகிறார்கள்.

வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த அணையின் நீர் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். மதுரை நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. தினசரி 60 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 40 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரும் அடுத்த 25 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். 71 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது 23.10 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வைகை அணையில் உள்ள தண்ணீரை ஆவியாகாமல் தடுக்க தண்ணீர் மேல் தெர்மோக்கோல் (ரெஜிபோர்ம்) அட்டைகளை பரப்பி வைக்கும் நூதன முயற்சி முறையில் நேற்று செயல்படுத்தப்பட்டது.

அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு தெர்மாகூல் அட்டைகளை மிதக்க விட்டனர். ஆனால் அந்த அட்டைகள் சிறிது நேரத்திலேயே காற்றில் கிழிந்து பறந்தன. நிகழ்ச்சி முடிவதற்கு முன்னனரே   அட்டைகள் கரையொதுங்கின. இந்த அட்டைகளை மிதக்கவிட ரூ.10 லட்சம் அரசு நிதி செலவிடப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பலரும் இந்த திட்டம் குறித்து முட்டாள்தனமானது என்று விமர்சித்து வருகிறார்கள். வெறும் 300 அட்டைளுக்கு ரூ10 லட்சம் மிக அதிகம். இதில் ஊழல் நடந்துள்ளது. மேலும் தெர்மாகூல் அட்டைகள் சில நாட்களில் முட்டை போன்று உதிர்ந்து விடும். அதனை மீன்கள் மற்றும் பறவைகள் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். அணையின் தண்ணீரும் நச்சுத்தன்மைக்கு ஆளாகும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். மனிதர்களுக்கும் நச்சு பாதிப்பு ஏற்படும் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.

வைகை அணையின் செயலாக்க பொறியாளர் எம்.முத்துப்பாண்டியன் தான் இந்த முட்டாள் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இப்படிப்பட்டவர் எப்படி தகுதியுள்ள பொறியியலாளராக இருக்கமுடியும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ அட்டைகள் மிதக்கவிட்ட திட்டத்தின் வீடியோ பார்க்க-
https://www.youtube.com/watch?v=N4wI6GwJpMw&feature=youtu.be



0 comments:

Post a Comment

Powered by Blogger.