அரசியல்

உதட்டு முத்தப் புகழ் கிருஷ்ணசாமி கடையடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு



உதட்டில் முத்தமிடுவது தமிழர்களின் கலாசாரமல்ல. அது வெள்ளையர்களின் கலாசாரம். தமிழர்கள் உதட்டில் முத்தமிடுவதில்லை என்று தமிழர்கள் குறித்த தனது வரலாற்று அறிவை முன்னர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளிப்படுத்தியிருந்தார்.

சண்டியர் தலைப்பு பிரச்சனையின் போது தமிழர்கள் உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என்று மதனுக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்தார்.
புதிய தமிழகம் என்று ஒரு கட்சியிருக்கிறது என்று யாருக்கும் தெரியாவிட்டாலும் இந்த உதட்டு முத்த கருத்தால் தொலைக்காட்சியில் தனது முகத்தை காட்ட கிருஷ்ணசாமிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இப்போது புதிய கூட்டணியை உருவாக்கவே முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்றும், இதில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என்றும் தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

''விவசாயிகளின் பிரச்சனைக்காக என கூறிக்கொண்டு தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் ஏப்ரல் 25ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு எந்த வகையிலும் தீர்வு கிடைக்காது. சுமார் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான வணிகம் பாதிக்கப்படும். மேலும் இந்தப் போராட்டம் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணியை உருவாக்கும் அரசியல் லாபத்திற்காக நடத்தப்படுகிறது. எனவே அவர்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது'' என்று அவர் நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வாழ்வாதாரமின்றி தவிக்கும் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு நடத்த திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று கூடிய அனைத்துக் கட்சியினர் முழுஅடைப்பு போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணசாமி போன்றோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ''தங்களது கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு, அனைத்து கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணுவிற்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.