இந்தியா

தமிழகத்திற்கு பாடம் நடத்தும் கேரளா



கேரள அரசு மலையாள மொழி கேரள மாநிலத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று அறிவித்துள்ள்ளது. அவசர சட்டத்திற்கு கேரள கவர்னர் சதாசிவம் இன்று ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதன்மூலம் கேரளாவில் மலையாள மொழிக்கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறும்  பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறும் பள்ளிகளுக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும். மலையாளம் பேசுவதற்கு எதிராக பிரச்சாரமோ, விளம்பரங்களோ பள்ளிகள் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை மலையாளம் கற்பிப்பது கட்டாயம் என்ற அவசர சட்டம் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. தாய்மொழிக்கல்வியின் முக்கியத்தை உணர்ந்த கேரள அரசியல்வாதிகள் இன்று அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கினார். இந்தியாவிலேயே கல்வியறிவு அதிகமான மாநிலமான கேரளா இந்த முடிவை எடுத்துள்ளது.

உலகம் முழுவதும் தாய்மொழி வழிக்கல்வியே காணப்படுகிறது. குறிப்பாக வளர்ந்த மேலைத்தேய நாடுகள் தாய்மொழி வழிக்கல்வியை இறுக்கமாக கடைப்பிடிக்கின்றன. ஆனால் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருந்த இந்தியா போன்ற நாடுகளில் தாய்மொழிக்கல்விக்கு உரிய முக்கியத்துவம் இருப்பதில்லை. அதுவும் தமிழகத்தில் தாய்மொழி தமிழுக்கு இருக்கும் மதிப்பு என்ன என்பதை யாரும் அறிவரர்கள்.

ஆங்கிலத்தில் படிப்பதும் பேசுவதும் பெருமை என்று தமிழக மக்கள் நினைப்பதற்கு முக்கிய காரணம் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்ததுதான். அடிமையாக இருந்து வெள்ளைக்காரர்களை எஜமான் என்று வணங்கியவர்கள் நாங்கள். அந்த அடிமைப்புத்தி நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. அதனால்தான் நாங்கள் தாய்மொழியை புறக்கணித்து ஆங்கிலத்தை போற்றுகிறோம்.

ஆனால் என்னதான் ஆங்கிலத்தை பேசினாலும் வெள்ளையர்கள் எம்மை அவர்களோடு சேர்த்துக்கொள்வதில்லை. எம்மை கறுப்பர்கள் என்றே பார்க்கிறார்கள். மேலும் தாய்மொழியை இழந்து அடிமை புத்தியுடன் நிற்கும் எம்மை ஏளனமாகவே நடத்துகிறார்கள்.

எமது அடிமைப்புத்தியில் மாற்றம் வராதவரை உலகின் மிக பழையதும் வளமானதுமான தமிழ் மொழி அழிவதை தடுக்க முடியாது.




0 comments:

Post a Comment

Powered by Blogger.