வெருகல் படுகொலைகளின் 13வது ஆண்டு நேற்று நினைவு கூரப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையில் நடத்தப்பட்ட 'வெருகல் படுகொலைகள்' விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக நோர்வே தலைமையிலான போர் நிறுத்தக் குழு இந்த படுகொலைகளை தடுக்காமல் கிழக்கை விட்டு தற்காலிகமாக வெளியேறியதன் முலம் குற்றத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
கருணா பிளவின் பின்னர் 10.04.2004ல் வன்னி புலிகள் கிழக்கை கைப்பற்ற வந்த போது 200ற்கும் மேற்பட்ட கிழக்கு மாகாண போராளிகள் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் உடல்கள் அடக்கம் செய்யப்படக்கூடாது என்று கட்டளை போடப்பட்டதால் வெருகல் ஆற்றங்கரையிலும் கதிர்வெளி கடலோரமும் பல நாட்கள் ஆண் பெண் போராளிகளின் உடல்கள் அழுகிக்கிடந்தன.
இந்த கோரமான சகோதர படுகொலைகளால் கிழக்கு மாகாணமே அதிர்ச்சியடைந்து போனது.
விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் கிழக்கு மாகாண போராளிகளின் பங்கு மிகப்பெரியது. ஜெயசிக்குறு சமர் ஆனையிறவு சமர் என ஏராளமான விடுதலைப்புலிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சமர்களில் கிழக்கு மாகாண போராளிகள் பெரும் வெற்றியை பெற்று கொடுத்திருக்கிறார்கள். ஏராளமான போராளிகள் வடக்கில் நடந்த இந்த சமர்களில் உயிரிழந்திருக்கிறார்கள்.
எனவே தமக்கு இப்படியொரு சம்பவம் நடக்கும் என கிழக்கு மாகாண போராளிகள் எதிர்பார்க்கவில்லை என்றே கிழக்கு மாகாண போராளிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வெருகல் படுகொலைகளின் 13வது ஆண்டு நினைவு கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த படுகொலைகளுக்கு நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதேவேளை ''இலங்கையில் நடந்த அனைத்து படுகொலைகளும் ஏதோ ஒரு விதத்தில் நியாயம் கேட்கவும் நீதி கேட்கவுமாக ஆண்டு தோறும் ஊடகங்கங்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வெருகல் படுகொலையின் நினைவை மட்டும் அனைவரும் மறுதலிப்பது ஏன்?அதனை அடக்கி வாசிக்கமுயல்வது ஏன்? இந்த நாட்டிலே எல்லா படுகொலைகளினதும் நினைவாக வீடியோக்களும் விளம்பரங்களும் ஆவணபடங்களும் ஆய்வுக்கட்டுரைகளும்கூட ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றனவே?
ஆனால் இந்த வெருகல் படுகொலையில் அகோரம் மட்டும் இன்றுவரை தமிழ் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருவதன் காரணமென்ன? தமிழனை தமிழனே கொன்று குவித்தான் என்பதாலா? யாருடனோ போராட புறப்பட்ட இயக்கம் தன் சொந்த போராளிகளையே கொன்று வீசிய கொடுமையை மறைப்பதற்காகவா? ஒரே இயக்கத்துக்குள்ளேயே சக பெண் போராளிகளை மானபங்கம் செய்த கொடுமை உலகில் வேறெங்கும் இடம்பெறவில்லை என்கின்ற அவமானம் வெளியுலகுக்கு தெரிய கூடாதென்பதாலா?''
என்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவ சந்திரகாந்தன் (பிள்ளையான்) வெளிட்ட அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment