படையினர் மீதான போர்க்குற்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
''இலங்கை படைகள் போர்க்குற்றங்களை செய்யவில்லை. அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றதாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. மேலும் இலங்கை அரச படையினர் மீது யுத்தக் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனில், புலிகளின் போர்க்குற்றங்களும் விசாரிக்கப்படவேண்டும். அப்படி புலிகளின் போர்க்குற்றங்களை விசாரிக்க அவர்களின் தலைவர்கள் தயாரா?'' என்று அமைச்சர் ராஜித சேனாரத்தின கேள்வியெழுப்பியிருந்தார்.
இது தொடர்பில் தமிழ் தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அரசாங்க அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையியே தனது எதிப்பினை தெரிவித்துள்ளார்..
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐக்கிய நாடுகள் சபையினால் ஸ்ரீலங்காவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதெனவும் அது இறுதி யுத்தத்தின் போது அதிகளவில் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அதனுடன் தொடர்புடையவர்கள் சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணை குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் ஏனைய நல்லிணக்க பொறுமுறைகள் உட்பட ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தணைகளை நிறைவேற்றவும் அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் கோரியிருந்தது.
இவ்வறான நிலையில் போர்க்குற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அதிகாரத்தை வழங்கவுள்ளதாகவும் மிகப்பெரிய பொய்யொன்றை முக்கிய அமைச்சராக உள்ள ராஜித தெரிவித்துள்ளார்.
இதற்கும் அப்பால், ஸ்ரீலங்காவில் சிங்கள மக்கள் வாழ்வது போன்றே தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சகல உரிமையையும் சலுகைகளையும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று வடக்கு கிழக்கில் பாரிய நில மீட்பு போராட்டங்களும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் இடம்பெற்றுவரும் நிலையில் எதனை சாதித்துவிட்டதாக அரசு பறைசாற்ற முயல்கின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
எனவே தெற்கில் ஓர் கதையும் வடக்கில் ஓர் கதையும் பேசும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் இலங்கை அரசாங்கமும் இரண்டு வருட கால அவகாசத்தில் ஐ.நாவின் மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுக்கின்றதா? என்பது தொடர்பில் குறித்த காலப்பகுதிக்கொருமுறை ஆய்வை மேற்கொண்டு ஸ்ரீலங்கா அரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment