சினிமா

ஓவராக பேசி கேவலமான சத்தியராஜ்



காவேரி நீர் பிரச்சனையில் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்த காரணத்தால் 2008ல் குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் ரஜினி மன்னிப்பு கேட்டு குசேலன் படத்தை வெளியிட வைத்தார்.

ஆனால் அப்போது சத்தியராஜ் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

"ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார். என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்.." என்று பெருமையாக பேசியிருந்தார்.

ஆனால் அதே சத்தியராஜ் இப்போது தமிழர் மானத்தையும் தன்மானத்தையும் விட்டு விட்டு கன்னடர்களிடம் மன்னிப்புக்கேட்டு கெஞ்சியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் பாகுபலி 2ம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

அன்று ரஜினிக்கு புத்தி சொன்ன சத்தியராஜ் இன்று தான் முன்வைத்த காலை ஏன் பின்வைத்தார் என்று தெரியவில்லை. சம்பளத்தை குறைத்துக்கொண்டு தலைநிமிர்ந்து இருக்காமல் மன்னிப்பு கேட்டது ஏன் என்றும் புரியவில்லை.

வாயிருக்கிறது என்பதற்காக ஓவராக பேசினால் இப்படித்தான் ஆகும் என்று சமூக வலைத்தளங்களில் சத்தியராஜை போட்டு தாளிக்கிறார்கள்.

ஒரு விடயம் பற்றி போதிய அறிவில்லாமல் மேடைகளில் நடிகர்கள் பேசுகிறார்கள். கைதட்டல் கிடைக்கிறது என்பதற்காக கொஞ்சம் ஓவராகவே பேசி விடுகிறார்கள். எந்த விடயத்தையும் சரியாக புரிந்துகொண்ட தூரநோக்குடன் அணுகுவதும், நிதானமாக கருத்து சொல்வதும் அவசியம் என்பதை சத்தியராஜ் மூலம் நடிகர்கள் இப்போது தெரிந்துகொண்டிருப்பார்கள்.

1 comments:

  1. //அன்று ரஜினிக்கு புத்தி சொன்ன சத்தியராஜ் இன்று தான் முன்வைத்த காலை ஏன் பின்வைத்தார் என்று தெரியவில்லை. சம்பளத்தை குறைத்துக்கொண்டு தலைநிமிர்ந்து இருக்காமல் மன்னிப்பு கேட்டது ஏன் என்றும் புரியவில்லை//

    அதுதானே!

    ReplyDelete

Powered by Blogger.