சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு தேசிய புலனாய்வு பிரிவு மீண்டும் சம்மன் விடுத்து உள்ளது.
விசாரணையில் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தெரியவந்ததுள்ளதாகவும், அவரின் சட்டவிரோத பண பரிமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் ஜாகீர் நாயக் மீது அமலாக்கப்பிரிவு, வழக்கு பதிவு செய்ததுள்ளது. ஆனால், சம்மன் அனுப்பியும், ஜாகீர் நாயக் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கக்கோரி, மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகளுக்கான கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்தது. அதை ஏற்று, ஜாகீர் நாயக்குக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்ததுள்ளது.
ஏற்கனவே டில்லி ஹைகோர்ட், மத்திய அரசு சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்பிற்கு தடை விதித்தது சரிதான் என 16.03.2017ல் உத்தரவு பிறப்பித்திருந்தது.
கடந்த வருடம் வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளை ஊக்குவித்ததில் முக்கிய பங்கு ஜாகிர் நாயக்கிற்கு உள்ளது என வங்காளதேசம் இந்திய அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டது. இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பமாயின.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில், பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ரோஹன் இம்தியாஸ். அவர் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தனது முகநூலில் பதிவில் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகத்துக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதென்று மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அதன்படி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள் தடைவிதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது .
கைது நடவடிக்கைக்கு அஞ்சி சவூதி அரேபியா சென்ற ஜாகிர் நாயக், பயத்தில் மீண்டும் இந்தியா திரும்பவில்லை.
இந்நிலையில், ஜாகிர் நாயக் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, டில்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு 16.03.2017ல் விசாரணைக்கு வந்தபோது ஜாகிர் நாயக் அமைப்பு, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து, நீதிபதி, சஞ்சீவ் சச்தேவ் ''நலன் கருதியே, ஜாகிர் நாயக் அமைப்பிற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. அரசு அளித்துள்ள ஆதாரங்கள் இதை உறுதி செய்கின்றன. ஜாகிர் நாயக் கருத்துகள், இளைஞர்கள் மனதில் பயங்கரவாத எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று உத்தரவிட்டிருந்தார்.
பிரிட்டன், கனடா, மலேசியா போன்ற நாடுகளும் ஜாகிர் நாயக்குக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment