தமிழகத்தில் இந்தியை திணிக்க பாஜக கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஏலவே இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டு தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் அது ஏதோ ஒரு வடிவில் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.
இம்முறை தமிழக நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்துவிட்டு இந்தியை புகுத்தியமை பிரச்சனையாக வெடித்துள்ளது.
பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இளைஞர்களும் இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சிலர் இந்தி எழுத்துக்களின் மீது கருப்பு மையை பூசி வருகிறார்கள்.
ஆனால் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்தி மட்டுமே தெரிந்த லாரி டிரைவர்களின் நலனுக்காகவே இந்தியில் மைல் கற்களில் எழுவதாக கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
''இந்தியாவின் தேசிய மொழிகளாக பதினெட்டு மொழிகளும் இருக்க வேண்டும். ஒரு மொழி மட்டும்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல. வடநாட்டினருக்கு வால் பிடிப்பதை விட்டுவிட்டு தென் மாநிலத்தவர்கள் பற்றி பொன் ராதாகிருஷ்ணன் பேச வேண்டும்'' என்று கூறியுள்ளார் பழ.கருப்பையா.
தமிழ் மட்டுமே தெரிந்த லாரி டிரைவர்களின் நலனுக்காக வட மாநில மைல் கற்களில் தமிழில் எழுதுவார்களா? தென்னிந்திய மொழிகளை மட்டுமே அறிந்த அந்தந்த மாநில லாரி டிரைவர்களின் வசதிக்காக அவரவர் மொழிகளில் வட மாநில நெடுஞ்சாலை மைல் கற்களில் எழுதுவார்களா? என்று கேட்கிறார்கள்.
பொன் ராதாகிருஷ்ணன் இந்திக்கு வக்காலத்து வாங்குவது ஏன்? பாஜக இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே சலுகை கொடுக்கத் துடிப்பது ஏன்? என்று கேள்விகளால் சமூக வலைத்தளங்களில் தமிழக மக்கள் வறுத்தெடுக்கிறார்கள்.
மேலும் நெடுஞ்சாலை மைல் கற்களில் மை பூசுவதற்குப் பதிலாக, திமுகவினர் தங்கள் முகத்திலேயே கருப்பு மை பூசிக் கொள்ளட்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சராக இருந்தாலும் பொன் ராதாகிருஷ்ணன் தமிழன்தானே? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழக பாஜக.வினருக்கு தமிழை விட இந்திதான் முக்கியமாகப் படுகிறது. தொடர்ந்தும் நெடுவாசல் முதல் இந்தி திணிப்பு வரை சகல விடயங்களிலும் தமிழக நலன்களுக்கு எதிராகவே பாஜக நடந்து கொள்கிறது என்று விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளன.
தமிழக மக்கள் இந்தி திணிப்பை பலமாக எதிர்த்து வருகின்ற அதேவேளை தினமலர் பத்திரிகையும் பாஜக கட்சியும் இந்தி திணிப்பை ஆதரித்து வருவதால் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
0 comments:
Post a Comment