உலகம்

ஆதாரமில்லாமல் சிரியா மீது குற்றம் சுமத்த முடியாது - ரஷ்யா



பயங்கரவாதிகளுக்கு எதிரான சிரிய படைகளின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிரியா பொதுமக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியதாக மேற்குலக ஊடகங்கள் பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தாக்குதலில் 11 சிறார்கள் உட்பட 70 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என்று இப்போது உறுதியாக கூறமுடியாது என சிரியாவுக்கான ஐ.நா.விசேட அணி யை சேர்ந்த ஸ்டெபான் டீ மிஸ்டுரா கூறியுள்ளார்.

ஐ.நா. வெளியுறவு கொள்கை பிரிவின் தலைவரும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை உறுதியாக சொல்ல போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் முதல் சந்தேகப்பார்வை சிரிய படைகள் மீதே விழுந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஊடகங்கள் சிரியாவுக்கு எதிராக சரியாக பயன்படுத்துகின்றன.

சிரியாவின் இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. இந்த தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது விட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி காலே எச்சரித்துள்ளார். பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளின் உதவியுடன் அமேரிக்கா சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை சிரியா மீதான மேற்குலகின் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.
ஐ.நா. விசேட குழுவை அனுப்பி இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே  யார் தாக்குதலை செய்தார்கள் என்று முடிவெடுக்க வேண்டும் என்று ரஷ்யா கூறுகிறது.

எப்படி இருந்தாலும் சிரியாவுக்கு தொடர்ந்தும் நாங்கள் ஆதரவளிப்போம் என்று ரஷ்யா உறுதியாக தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நீண்டகால அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
சிரியா நாடானது நீண்ட காலமாக ரஷ்ய சார்பு நாடாக இருக்கிறது. எனவேதான் அமெரிக்கா சிரியாவில் உள்நாட்டு போரை ஏற்படுத்தி சீரழித்து வருகிறது என விமர்சனங்கள் உள்ளன.

ஆனால் வழமைபோலவே எமது  தமிழ் ஊடகங்கள் அமெரிக்க - மேற்குலகு பிரச்சார செய்திகளை அப்படியே வாந்தியெடுத்து வருகின்றன.









0 comments:

Post a Comment

Powered by Blogger.